Tuesday, October 17, 2006

புனே பங்களாவில் சிவாஜி கிளைமாக்ஸ் காட்சி

ரஜினி நடிக்கும் சிவாஜி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி புனேயில் உள்ள பிரமாண்ட சொகுசு மாளிகையில் படமாக்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கும் சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் வசிக்கும் மாளிகை பிரமாண்டமாக இருக்க வேண்டும் என இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார்.

செட் அமைத்து சொகுசு மாளிகையை உருவாக்கினால் மாளிகைக்குள் வைக்கப்படும் அலங்கார பொருட்களின் வாடகை மட்டுமே பல லட்சங்களைத் தாண்டும். மேலும், அந்த அலங்கார பொருட்களை கொண்டு வந்து ஷட்டிங் முடியும்வரை பாதுகாத்து திரும்ப அனுப்பி வைப்பது சிரமமான வேலை என நினைத்ததால் பிரமாண்ட சொகுசு மாளிகையை தேடிக்கொண்டிருந்தனர்.

அதன்படி புனே நகரில் உள்ள தொழிலதிபர் அவினாஷ் போஸ்லேவுக்கு சொந்தமான பங்களாவில் கிளைமாக்ஸ் காட்சியை படம் பிடிக்க முடிவுசெய்துள்ளனர். இங்கு ஒரு நாள் ஷ¨ட்டிங் நடத்த 3 லட்ச ரூபாய் வாடகையாம்.

பெரிய பட்ஜெட்டில் படமாக்கப்பட்ட இந்தி படங்களின் படப்பிடிப்பு மட்டுமே இங்கு நடக்கும்.

Source: Dinakaran

No comments: