சிவாஜியில் அசத்தல் ஆடைகளில் ரஜினி
Dinakaran
காஸ்ட்யூம் டிசைனர் தகவல்
பெங்களூர், ஆக. 15: ரஜினியின் ஸ்டைலுக்கு ஏற்ப சிவாஜி படத்தில் அவருக்கு ஆடைகள் இருக்கும் என அப்பட ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா கூறினார்.
இந்தி சினிமாவில் பிரபலமாக இருப்பவர் மனீஷ். இவர் ரஜினியின் சிவாஜி படத்தில் பணிபுரிகிறார். பெங்களூர் வந்திருந்த மனீஷ் மல்ஹோத்ரா இது குறித்து கூறியதாவது: இயக்குநர் ஷங்கரின் இந்தி படமான ‘நாயக்Õகில் பணிபுரிந்தேன். சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஆடை வடிவமைக்க அழைத்தபோது ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டேன்.
ரஜினியின் ஸ்டைல் இந்தியா முழுவதும் புகழ் பெற்றது. ஆனாலும் ஸ்டைலான முறையில் இது வரை அவருக்கு ஆடைகளை யாரும் வடிவமைக்கவில்லை. அந்த குறையை ‘சிவாஜியில் போக்க இருக்கிறேன். ரஜினி, வசீகரமான நடிகர் என்பதால் எல்லா ஆடைகளிலும் அசத்தலாக இருக்கிறார்.
இந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் வாழ்வதாக சித்தரிக்கப்படுகிறது. அதற்கேற்ப ஆடைகளை வடிவமைத்து இருக்கிறேன். தோல் ஆடைகளை இதில் ரஜினி அதிகம் அணிவார்.
தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி, மிகவும் எளிமையாக பழகுகிறார். கர்வம் துளி கூட இல்லை. அவருடைய முகம், கண்ணாடியைப் போன்று வெளிப்படையானது. இவ்வாறு மல்ஹோத்ரா சொன்னார்.
No comments:
Post a Comment