வியக்க வைத்த ரஜினி
சென்னை பின்னி மில்லில் சிவாஜி படத்துகாக மிகப் பெரிய மார்க்கெட் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பீட்டர் ஏய்ன் பயிற்சியில் ஒரு அதிரடி சண்டைக் காட்சியில் நடித்து வருகிறார் ரஜினி. வில்லன்களுடன் அவர் மோதும் காட்சிகளைப் படமாக்கிய இயக்குனர் ஷங்கர், ரஜினியுடன் ஷ்ரேயா மற்றும் மும்பை மாடல் அழகிகள் நடித்த பாடல் காட்சியை வித்தியாசமான கோணத்தில் படமாக்கியுள்ளார்.இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் கலகலப்பாக காணப்படும் ரஜினி, ஷங்கர் விஷயத்தில் தலையிடுவதே இல்லையாம். அவர் என்ன சொல்கிறாரோ, அதைக் கேட்டு நடிக்கிறாராம். ரஜினியின் இந்த மனப்போக்கு, அவரைச் சுற்றி நடித்துக் கொண்டிருப்பவர்களை வியக்க வைத்துள்ளது.
No comments:
Post a Comment